1. Home
  2. தமிழ்நாடு

வெளியானது கேட் தேர்வு முடிவுகள்!!

வெளியானது கேட் தேர்வு முடிவுகள்!!

முதுநிலை பொறியியல் படிப்புக்கான கேட் நுழைவுத் தேர்வு முடிவுகளை ஐஐடி கான்பூர் வெளியிட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering - GATE) எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் கேட் தேர்வு நடைபெற்றது. கேட் நுழைவுத் தேர்வின் தற்காலிக விடைக்குறிப்புகள் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆட்சேபனைகள் பிப்ரவரி 25 வரை தேர்வர்களிடம் இருந்து வரவேற்கப்பட்டது.


வெளியானது கேட் தேர்வு முடிவுகள்!!

இந்நிலையில் கேட் நுழைவுத் தேர்வுக்கான முடிவை ஐஐடி கான்பூர் வெளியிட்டுள்ளது. https://gate.iitk.ac.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மதிப்பெண் அட்டைகள் வரும் 21ஆம் தேதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like