தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை!!
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஆவடி பத்திரப்பதிவு, வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். ஏராளமான புகார்கள் குவிந்ததால், திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்து 700 பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலையில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதே போல், கடலூர், சேலம், திருப்பூர், சிவகங்கை, தேனி, நீலகிரி உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நாளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in