இணையத்தில் பட்டைய கிளப்பும் தசரா பட டிரைலர்..!!

இணையத்தில் பட்டைய கிளப்பும் தசரா பட டிரைலர்..!!
X

நானி நடிப்பில் உருவாகியுள்ள மாஸான திரைப்படம் 'தசரா'. வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் வெறித்தனமாக நானி நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ரத்தம் தெறிக்க தெறிக்க உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இதுவரை 92 லட்சம் பார்வையளர்களை கடந்துள்ளது


Next Story
Share it