காஷ்மீரில் பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்..!!

காஷ்மீரில் பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்..!!
X

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் வெளிவந்த ‘மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்‘ என தொடர்ந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதனால் இவரது படத்தை எடுக்க தயாரிப்பாளர்கள் மிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ‘ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (மார்ச்-14) இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். காஷ்மீரில் ‘லியோ‘ படப்பிடிப்பில் இருக்கும் அவர் நேற்றிரவு நண்பர்களால் ஏற்பாடு செய்த பார்ட்டியில் பிறந்த நாள் கொண்டாடினார். அதில் விஜய், சஞ்சய் தத், திரிஷா மற்றும் லியோ படக்குழுவினருடன் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் திரையுலகினர், ரசிகர்கள் பலரும் லோகேஷிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது அவரின் பிறந்தநாள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது.Next Story
Share it