ராணுவ அதிகாரியாக நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்..?

ராணுவ அதிகாரியாக நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்..?
X

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்‘ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. படப்பிடிப்பு இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் நடக்க உள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. ராணுவ கதைகளம் கொண்ட இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story
Share it