1. Home
  2. தமிழ்நாடு

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி பா.ஜ.க வில் இணைகிறாரா ?

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி பா.ஜ.க வில் இணைகிறாரா ?

ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வராகவும், அக்கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருக்கும் கிரண் குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் தனது அனைத்து பொறுப்புகளிலும் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இவர் பாஜகவில் சேர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

இவருக்கு பாஜகவில் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா? அல்லது ஆந்திராவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

பிரிக்கப்படாத ஆந்திராவின் கடைசி முதல்வராக இருந்தவர் கிரண் ரெட்டி. 2010, நவம்பர் 11-ம் தேதி, முதல்வராக பதவியேற்றவர், ஆந்திராவை பிரிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்ததை எதிர்த்து 2014, மார்ச் 10-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆந்திராவை இரண்டாக பிரிக்க காங்கிரஸ் முடிவு எடுத்ததைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி ஜெய் சமைகியாந்த்ரா சமிதி என்ற கட்சியை மார்ச் 12, 2014ல் துவக்கி இருந்தார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டார். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்தால், சிறிது காலம் அமைதியாக இருந்தார். பின்னர் மீண்டும் 2018, ஜூலை 13-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பின்னரும் பெரிய அளவில் செயல்படாமல் இருந்தார். தற்போது, மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி, பாஜகவில் சேருவதற்கு திட்டமிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like