1. Home
  2. தமிழ்நாடு

குவியும் பாராட்டுகள்…! வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர்..!

குவியும் பாராட்டுகள்…! வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர்..!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுரேகா என்பவர் வந்தே பாரத் ரயில் சேவையை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் அதிவேக விரைவு ரயில் சேவையான வந்தே பாரத் ரயில் சேவைகள் மத்திய அரசால் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் சேவை ஒவ்வொரு இடத்திலும் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பயணிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சோலாப்பூரில் இருந்து மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா ரயில்வே நிலையம் வரை சுரேகா யாதவ் வந்தே பாரத் ரயில் சேவையை இயக்கியுள்ளார்.

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சுரேகா யாதவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது போல் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் விரைவில் 400 வந்தே பாரத் ரயில் சேவைகளை இயக்குவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Trending News

Latest News

You May Like