விரைவில் அமலுக்கு வரும் புதிய சட்டம்..!!

விரைவில் அமலுக்கு வரும் புதிய சட்டம்..!!
X

நாட்டில் தற்போது மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் உற்பத்தியை ஒழுங்குப்படுத்துகிற அதிகாரத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கொண்டுள்ளன.

இந்த அதிகாரத்தை மத்திய அரசே எடுத்துக் கொள்ளும் வகையில் புதிய சட்ட மசோதா தயாராகி இருக்கிறது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு சட்டமாகிவிட்டால் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் அனைத்து அதிகாரமும் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் மத்திய அரசுக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த சட்ட மசோதா அமலுக்கு வந்தால் மருந்துகள், அழகுசாதன பொருட்கள் இறக்குமதி தொடர்பான குற்றங்களுக்கு அபராதம் உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story
Share it