1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!!

ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தியுள்ளது. இந்நிலையில், பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரேஷன் கடைகளில் மின்னணு விற்பனை சாதனங்களை இணைக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து டீலர்களும் மின்னணு தராசு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி எந்த ஒதுக்கீட்டையும் திருடக்கூடாது என்பதற்காக அரசு இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.



அரசின் இந்த உத்தரவுக்குப் பிறகு, தற்போது நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் ஆன்லைன் மின்னணு விற்பனை மையத்துடன் அதாவது பிஓஎஸ் கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இனி ரேஷன் எடையில் குளறுபடியும் நடக்க வாய்ப்பிருக்காது. ரேஷன் டீலர்களுக்கு ஹைபிரிட் மாடல் பாயின்ட் ஆப் சேல் மிஷின்களை அரசு வழங்கியுள்ளதால், பொது விநியோகத் திட்டத்தின் பயனாளிகள் எந்தச் சூழ்நிலையிலும் குறைவான ரேஷன் கிடைக்காது.

நெட்வொர்க் இல்லாவிட்டால் இந்த இயந்திரங்கள் ஆஃப்லைனிலும் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் பதுக்கல் இருக்காது என நம்பப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like