1. Home
  2. சினிமா

பிரபல வில்லன் நடிகரை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி!!


தனது வளர்ச்சி பிடிக்காமல் தனது அண்ணனே தனக்கு ஸ்லோ பாஸ்சன் கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் பகீர் கிளப்பியுள்ளார்.

பிரபு நடித்த கலியுகம் படம் மூலம் அறிமுகமான நடிகர் பொன்னம்பலம், அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், தாய் மாமன், கூலி, சிம்மராசி, முத்து, நாட்டாமை, பகவதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நாட்டாமை, முத்து, அமர்க்களம் ஆகிய படங்கள் பொன்னம்பலத்திற்கு பெரிய அளவில் ஹிட் படங்களாக அமைந்தன. இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.


பிரபல வில்லன் நடிகரை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி!!


விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல் ஹாசன், சரத்குமார், அர்ஜூன் என்று பிரபலங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் பொன்னம்பலம் தனது அண்ணனே தன்னை கொலை செய்ய முயற்சித்தது குறித்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.

பொன்னம்பலம் தந்தைக்கு நான்கு மனைவிகள். அதில் 3ஆவது மனைவியின் மகன், அதாவது தனது அண்ணனை அவர் மேனேஜராக வைத்திருந்தார். அப்போது அவர் ஸ்லோ பாஸ்சன் கொடுத்து பொன்னம்பலத்தை கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.




அவரைவிட தான் நன்றாக வளர்ந்து வந்ததால், அவர் அவ்வாறு நடந்து கொண்டதாக பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஆனால் அதன்பிறகு அவரை மன்னித்து விட்டதாகவும் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like