1. Home
  2. தமிழ்நாடு

கள்ளக்காதலுக்கு இடையூறு… கணவனைக் கொன்ற மனைவி!!


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தச்சூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் - ராதிகா தம்பதிக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், ராதிகாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


கள்ளக்காதலுக்கு இடையூறு… கணவனைக் கொன்ற மனைவி!!

இந்நிலையில் கிராமத்தில் வயல் பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் பாலகிருஷ்ணன் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், ராதிகாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதற்கு பாலகிருஷ்ணன் இடையூறாக இருந்ததால், கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலகிருஷ்ணன் தூங்கும் போது தலையில் அடித்து முகத்தில் துணியை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து ராதிகாவை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like