1. Home
  2. தமிழ்நாடு

கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம் விலை!!


திண்டுக்கலில் வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளது. ஆனால் இந்த விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேனி, கம்பம், நிலக்கோட்டை, தாராபுரம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து திண்டுக்கல் வெங்காய சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

இங்கு வரக்கூடிய சின்ன வெங்காயத்தை ஏலம் எடுக்கும் வியாபாரிகள் திருச்சி, தஞ்சை, சென்னை, கோவை, மதுரை மற்றும் கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படும்.


கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம் விலை!!


கடந்த 1ஆம் தேதி வரை ஒரு கிலோ சின்ன வெங்காயம் 30 ரூபாய் முதல் 35 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. தற்போது மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளிலிருந்து வியாபாரிகள் வெங்காயம் கொள்முதல் செய்ய வருகை தந்துள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் வெங்காயத்தின் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வானது குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் மூன்று மாத காலமாக 9 ரூபாய் முதல் 17 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் பெரிய வெங்காயத்தின் விலை அதே விலையில் நீடித்து வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like