1. Home
  2. சினிமா

ரஜினி பாராட்டு விழா திடீர் ரத்து!!

ரஜினி பாராட்டு விழா திடீர் ரத்து!!

நடிகர் ரஜினிகாந்துக்கு வரும் 26ஆம் தேதி நடத்தப்பட இருந்த பாராட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் வரும் 26ஆம் தேதி அவருக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டிருந்தனர். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு பாராட்டு மற்றும் நலிந்த ரஜினி ரசிகர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருந்தது. நிகழ்ச்சியை வேலூர் ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் சோளிங்கர் ரவி நடத்த இருந்தார்.




'மனிதம் காத்து மகிழ்வோம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்த இருந்தனர். தலைப்பை நடிகர் லாரன்ஸ் வழங்கியதுடன் அந்த தலைப்பை வெளியிட்டு வாழ்த்தியும் இருந்தார். இந்த விழாவில் சினிமா துறையில் இருந்து பிரபலங்கள் கலந்து கொள்ள இருந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக விழா நிறுத்தி வைக்கப்படுவதாக சோளிங்கர் ரவி அறிவித்துள்ளார். இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


ரஜினி பாராட்டு விழா திடீர் ரத்து!!

newstm.in

Trending News

Latest News

You May Like