பாலியல் தொல்லைக்கு ஆளான ஜப்பானிய பெண் உருக்கமான பதிவு!!
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான ஜப்பானிய இளம்பெண் இந்தியா குறித்து உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.
டெல்லி பகர்கஞ்ச் பகுதியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பான் நாட்டை சேர்ந்த 24 வயது இளம்பெண் மீது வண்ணம் பூசிய இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்குக் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வீடியோவை ஆதாரமாக வைத்து ஜப்பான் பெண்ணிடம் அத்துமீறிய 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட ஜப்பான் பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை என்றும் அவர் வங்கதேசத்திற்குச் சென்றுவிட்டார் என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த ஜப்பானிய இளம்பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சம்பவம் நடந்த அன்றே நான் இந்தியாவை விட்டு வெளியேறி வங்கதேசம் சென்றுவிட்டேன். நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன்.
பல முறை இந்தியாவிற்கு வந்திருக்கிறேன். இது கண்கவர் நாடு. இதுபோன்ற ஒரு சம்பவம் நடத்திருப்பதால் நான் இந்தியாவை வெறுக்க மாட்டேன், எப்போதும் நேசிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
newstm.in