1. Home
  2. தமிழ்நாடு

இளம்பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி வீசிய கொடூரம்!!

இளம்பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி வீசிய கொடூரம்!!

இளம்பெண்ணை கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டம் சோய்பக் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் கடந்த 7ஆம் தேதியில் இருந்து காணாமல் போனார். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் சகோதரர் தன்வீக் அகமதுகான் காவல்துறையில் புகார் அளித்தார்.

தனது சகோதரி கோச்சிங் வகுப்புக்கு சென்று வீடு திரும்பவில்லை என்று அவர் புகார் குறிப்பிட்டிருந்தார். அந்த பெண்ணுக்கு அறிமுகமானவரான ஷபீர் அகமது வானி என்ற 45 வயது நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.


இளம்பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி வீசிய கொடூரம்!!


பெண் கடைசியாக பேசிய தொலைபேசி அழைப்புகளை அடிப்படையாக கொண்டு ஷபீரை பிடித்தனர். அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பெண்ணை கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி வீசியதாக ஒப்புக்கொண்டார்.

தச்சு வேலை செய்யும் ஷபீர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். அவர் பெண்ணின் உறவினர்களை பெண் கேட்டு அனுகியுள்ளார். ஆனால் பெண்ணின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் அவர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.


இளம்பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி வீசிய கொடூரம்!!

பின்னர் தச்சு வேலை செய்வதாக வீட்டிற்கு வந்தபோது அந்த பெண்ணை பார்த்துள்ளார். இதனையடுத்து அன்றைய தினமே பெண்ணை கொலை செய்த ஷபீர், அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி ஓம்பூரா பகுதியில் உள்ள பல இடங்களில் வீசியுள்ளார்.

ஷபீரை கைது செய்த போலீஸார் இறந்த பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like