1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் நேற்று முன்தினம் உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு : அமைச்சர் தகவல்..!!

தமிழகத்தில் நேற்று முன்தினம் உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு : அமைச்சர் தகவல்..!!

தமிழகத்தின் தற்போதைய மின் தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த மார்ச் 2022-ல் பகல் நேரத்தில் 17,196 மொகாவட்டாக இருந்த மின் பயன்பாடு மார்ச் 2023-ல் 18,100 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் மின்சார பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

10. 03. 2023 அன்று தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக மெகாவாட் அளவில் 17,647. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 04. 03. 2023-ல் 17,584 என்று கூறப்பட்டுள்ளது.



Trending News

Latest News

You May Like