1. Home
  2. தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு..!! மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுக்கான தேதி மாற்றம்..!!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உதவி வனப்பாதுகாவலர் (தொகுதி-1ஏ பணிகள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தொகுதி-1சி பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 9 ஆம் தேதி காலை நடைபெறவிருந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 29 மாவட்டங்களில் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை நடைபெறும்.

இதேபோன்று ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறவிருந்த உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 26 மாவட்டங்களில் மே 3 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிறப்கல் 12.30 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தேர்வுகளுக்குமே முதல்நிலைத் தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like