1. Home
  2. தமிழ்நாடு

தலைநகரை மாற்றும் இந்தோனேசியா ?


இந்தோனேசியாவின் அதிபரான ஜோகோ விடோடோ, நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஜாகார்த்தாவுக்கு நிலநடுக்கம் மற்றும் கடலில் மூழ்கும் அபாயங்களும் காத்திருப்பதால் விரைவில் தலைநகர் என்ற அந்தஸ்திலிருந்து ஓய்வுபெறும் என அறிவித்து இருந்தார்.

இவரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தோனேசியா 2022 ஆம் ஆண்டிலேயே புதிய தலைநகரை கட்டமைக்கும் பணிகளை தொடங்கிவிட்டது. அதன்படி தற்போது இந்தோனேசிய அரசு ஜகார்த்தாவை காலி செய்துவிட்டு போர்னியோ தீவை நோக்கி செல்கிறது.

ஜகார்த்தா வேகமாக கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும், 2050 ஆம் ஆண்டுக்குள் நகரின் மூன்றில் ஒரு பங்கு கடலில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.

இதனிடையே பசுமையான தீவாக பார்க்கப்படும் போர்னியோவை தலைநகராக மாற்றுவதற்கு ஏராளமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். வனப்பகுதி அழிக்கப்பட்டு, வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் தலைநகரை மாற்றும் பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


Trending News

Latest News

You May Like