1. Home
  2. தமிழ்நாடு

அட சீ..இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாட வந்த ஜப்பான் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்..!!

அட சீ..இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாட வந்த ஜப்பான் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்..!!

தலைநகர் டெல்லியில் பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர்வாசிகளும், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் சேர்ந்து ஹொலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஜப்பானை சேர்ந்த பெண் பயணியிடம் சில இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். அந்த பெண் மீது முட்டையை வீசி, பாலியல் ரீதியில் அத்துமீற முயற்சித்தனர். தன்னிடம் அத்துமீறிய ஒரு இளைஞனை அந்த இளம்பெண் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணி புகார் அளிக்கவில்லை. ஆனால், சமூகவலைதளத்தில் வைரலான வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹோலி கொண்டாட்டத்தின்பொது வெளிநாட்டு பெண் பயணியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

அதேவேளை, அந்த பெண் சுற்றுலா பயணி தற்போது வங்காளதேசம் சென்றுவிட்டதாகவும், அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் என்று டெல்லி போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹோலி கொண்டாட்டத்தின் போது வெளிநாட்டு பெண் பயணியிடம் இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



Trending News

Latest News

You May Like