1. Home
  2. தமிழ்நாடு

அடுத்து என்னென்ன நடக்கும்… சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆர்வமாக காத்திருக்கும் பக்தர்கள்…!

அடுத்து என்னென்ன நடக்கும்… சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆர்வமாக காத்திருக்கும் பக்தர்கள்…!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலின் முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆண்டவர் உத்தரவுப் பெட்டி தான் இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

முருகப் பெருமானே பக்தர் ஒருவரின் கனவில் வந்து சொல்லும் பொருள் இந்த பெட்டியில் வைக்கப்பட்டு, பூஜை செய்யப்படுகிறது. அடுத்த பக்தர் வந்து சொல்லும் வரை அந்த பொருள் மாற்றப்படுவதில்லை. இந்த ஆண்டவர் பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருட்கள் சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை.

இதற்கு முந்தைய காலங்களில் துப்பாக்கி தோட்டா, சைக்கிள், திருமாங்கல்ய கயிறு, தராசு உள்ளிட்ட பல பொருட்கள் வைத்து பூஜை செய்யப்படுகிறது. ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்களுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது என்றாலும், குறைந்தபட்சம் ஒரு மாதங்களாவது ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படும் பொருள் மாற்றப்பட்டாமல் இருந்துள்ளது.


ஆனால் பிப்ரவரி 27 ம் தேதி தான் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் பூஜைப் பொருள் மாற்றப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோகுல் ராஜா என்ற பக்தரின் கனவில் வந்த உத்தரவின் பேரில் தற்போது உலக உருண்டை, அத்திரி என்ற பசு சிலை, குதிரையை குறிக்கும் பொருட்கள், இருண்டு திருமாங்கல்ய சரடுகள் ஆகியன வைத்து பூஜை செய்யப்பட்டு வருகின்றன.

இதனால் இந்த பொருட்கள் எதை குறிக்கின்றன, இவற்றால் உலகில் எந்த விதமான மாற்றங்கள் நிகழும் என்பதையும் தெரிந்து கொள்ள பக்தர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இந்த பொருட்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா, எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா என தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கோவில் நிர்வாகத்தினரை அணுகி விளக்கம் கேட்டு வருகின்றனர். வேல் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட 10 நாட்களிலேயே அடுத்த பொருள் மாற்றப்பட்டுள்ளதும் பக்தர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.

Trending News

Latest News

You May Like