1. Home
  2. தமிழ்நாடு

பருவமழை எப்போது தொடங்கும்… ஜெகந்நாதர் ஆலயத்தில் பதில் கிடைக்கும் அதிசய நிகழ்வு!!

பருவமழை எப்போது தொடங்கும்… ஜெகந்நாதர் ஆலயத்தில் பதில் கிடைக்கும் அதிசய நிகழ்வு!!

நம்ம ஊரில் மழை வருமா என கேட்டால் கிராமத்தில் உள்ள வயதானவர்கள், விவசாயிகள் வானத்தை பார்த்தே மழை வருமா, வராதா என சொல்லி விடுவார்கள். நாம் அதையே ஆச்சரியமாக கேட்டு வருகிறோம். எப்படி சொல்கிறார்கள் என்ற சூட்சமம் இதுவரை யாருக்கும் தெரியாது.இது போல் அறிவியல், விஞ்ஞானம், மனித அறிவுக்கு எட்டாத பல ஆச்சரியங்கள், அதிசயங்கள், அமானுஷ்யங்களை கொண்டது நமது இந்திய பூமி. அதில் ஒன்று தான் உத்திப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜெகந்நாதர் ஆலயம். ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகந்நாதர் ஆலயத்தை போலவே உத்திரப்பிரதேசத்தில் உள்ள இந்த கோவிலும் மிகவும் பிரபலமான ஒன்று.

உத்திர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் பென்தா என்ற கிராமத்திலருந்து 3 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது ஜெகந்நாதர் ஆலயம். இப்பகுதியில் மக்கள் மழை எப்போது வரும் என்பதை இந்த கோவிலை பார்த்தே சொல்லி விடுகிறார்கள். சுமார் 1000 வருடங்கள் பழமையான இக்கோவிலின் மேற்கூரையில் இருந்து திடீரென தண்ணீர் சொட்ட துவங்கும். சொட்டும் நீரின் அளவை பொருத்து அந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்யும் என அப்பகுதி மக்கள் கணக்கிட்டு விடுகிறார்கள்.

இந்த கோவிலில் நீர் சொட்ட துவங்கிய 7 நாட்களில் பருவமழை பெய்ய துவங்கி விடும். வெளியில் பருவமழை துவங்கியதும், கோவிலுக்குள் சொட்டிக் கொண்டிருந்த நீர் நின்று விடுகிறது. கோவிலை சுற்றிலும், மரங்களோ, மலையோ ஏதும் இல்லாத நிலையில் எங்கிருந்து நீர் சொட்டுகிறது, இதற்கு என்ன காரணம் என இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பல விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் இங்கு வந்து ஆய்வு செய்து பார்த்தும் இதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அற்புதமான நிகழ்வினை ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கண்டு செல்கிறார்கள்.

பருவமழை எப்போது தொடங்கும்… ஜெகந்நாதர் ஆலயத்தில் பதில் கிடைக்கும் அதிசய நிகழ்வு!!

கோவிலுக்குள் எப்படி மழை பெய்கிறது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இந்த கோவில் எப்போது, யாரால் கட்டப்பட்டது என்பதும் தெரியவில்லை. ஆனால் 11 வது நூற்றாண்டில் கடைசியாக இந்த கோவில் புனரமைக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

அதுவும் உறுதியாக தெரியவில்லை. இந்த கோவிலின் சுற்றுச் சுவர் 14 அடி தடிமன் கொண்டதாகும். வழக்கமாக எந்த கோவிலும் இது போல் அமைக்கப்படுவதில்லை. இந்த கோவில் முற்றிலும் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்டுள்ளது.

கோவிலுக்குள் மழை பெய்ய துவங்கியதுமே, இன்னும் சரியாக 7 நாட்களில் பருவமழை துவங்கி விடும் என்ற நம்பிக்கையால், முன்பே இப்பகுதி விவசாயிகள் உழவுப் பணிகளை துவக்கி விடுகிறார்கள். கோவிலுக்குள் மழை பெய்ய துவங்கியதும், தொடர்ந்து 7 நாட்கள் மழை பெய்து கொண்டே இருக்கும். இந்த காலத்தில் இப்பகுதி மக்கள் விழா எடுத்து கொண்டாடுகின்றனர்.

Trending News

Latest News

You May Like