வரலாற்று சம்பவம் ..!! இன்று நடக்கவிருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் போடுகிறார் பிரதமர் மோடி..!!

வரலாற்று சம்பவம் ..!! இன்று நடக்கவிருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் போடுகிறார் பிரதமர் மோடி..!!
X

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியானது இன்று ஆகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

இந்த டெஸ்டை `டிரா' செய்தாலே இந்தியா தொடரை வென்றுவிடும். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு இந்த டெஸ்டை வெல்வது கட்டாயமாகும்.இதனால் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை இந்தியா தோல்வியடைந்தால் இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டிகளின் முடிவுக்கு காத்திருக்க வேண்டும்.


இந்நிலையில், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கடைசி டெஸ்ட்டின் முதல் நாள் போட்டியை காணவுள்ளார்.மேலும் பிரதமர் நரேந்திர மோடி தான் டாசை போட உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கிரிக்கெட் வர்ணனையும் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து பிரதமர், ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் கிரிக்கெட் போட்டியின் போது வர்ணனை செய்வது வழக்கம். இதனால் பிரதமர் மோடியும் அந்த ஃபார்முலாவை பயன்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இன்றைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


Next Story
Share it