நெல்சன் திலீப்குமாருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஜாக்கி ஷெராஃப்!
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் திரைப்படம், ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுவென்று நடந்து வருகிறது.
ஜெயிலர் திரைப்படம் ஆரம்பிக்கப்படும்போது ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் மட்டுமே நடிகர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து, ஜெயிலர் திரைப்படத்தில் மேலும் பல முக்கிய நடிகர்கள் இணைந்தனர். அதன்படி, மோகன்லால், சிவ்ராஜ்குமார், சுனில் மற்றும் தமன்னா போன்றோர் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் நடிகர்கள் பட்டாளம் இதோடு நிற்காமல், சமீபத்தில் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஜெயிலர் திரைப்படத்தின் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு ஜாக்கி ஷெராஃப் பழைய ஸ்கூட்டர் ஒன்றை பரிசளித்துள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெல்சன் திலீப்குமார் பகிர்ந்துள்ளார்.