1. Home
  2. தமிழ்நாடு

மகளிர் தினத்தையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்டு கூகுள்..!!

மகளிர் தினத்தையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்டு கூகுள்..!!

பிரபல தேடுபொறியான கூகுள் தளம் பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள், முக்கிய நபர்களின் நினைவு நாள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிட்டு கௌரவிப்பது வழக்கம். அந்தவகையில் இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பெண்களை கௌரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.


மகளிர் தினத்தையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்டு கூகுள்..!!

உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிப்பிடும் வகையில் இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவம், விண்வெளி, பேச்சாளர்கள் என பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனையாளர்களாக இருப்பதைக் குறிப்பிட்டுள்ளதோடு, தாய்மை, குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு, மத மற்றும் நிற வேறுபாடுகளைக் ஒற்றுமை பாராட்டும் பெண்கள், போராட்டக் களங்களில் பெண்கள் முன்னிலை வகிப்பது போன்றவற்றை குறிக்கும் வகையிலான காட்சிகளும் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன.

Trending News

Latest News

You May Like