1. Home
  2. தமிழ்நாடு

தளபதி விஜய் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் – எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்..!!

தளபதி விஜய் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் – எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். ஆனால் இவரை இந்த சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனரான அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் ஒரு காலக்கட்டத்தில் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு சில செயல்களை செய்துள்ளார். ஆனால் அதில் விஜய்க்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் அப்பா, மகன் உறவில் பிரிவினை ஏற்பட்டது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள புத்திர காமேட்டீஸ்வரர் கோயிலுக்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

இது குறித்து தகவல் தெரிந்ததும், ஏராளமான செய்தியாளர்கள் கோயிலின் முன்பு குவிந்துள்ளனர். அப்போது செய்தியாளர் ஒருவர், விஜய் அரசியலுக்கு வருவாரா எனக் கேட்டுள்ளார்? உடனே அதற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் குறித்த கேள்விகளை அவரிடமே கேளுங்கள் என ஒரு வரியில் கூறியுள்ளார். இந்தச்சூழலில் அப்பா, மகன் இடையே ஏற்பட்ட பிரச்சனை இன்னும் தீரவில்லை என்று சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like