திடீர் அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்!!
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இயக்குநர் பா.ரஞ்சித் சார்பட்டா 2ஆம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் நினைவில் இருக்கும் வகையில் திரைக்கதையை உருவாக்கி இருந்தார் ரஞ்சித்.
கொரோனா காரணமாக படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சார்பட்டா பரம்பரை திரைப்படம், இன்றளவும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாவது பாகம் உருவாகிறது என பா.ரஞ்சித் அறிவித்துள்ளார். அவர் தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான வேலைகள் விரைவில் முடிவடையும் என கூறப்படுகிறது.
அதை முடித்தவுடன் சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை ரஞ்சித் தொடங்க உள்ளார். முதல் பாகத்தில் நடித்த பலரும் இந்த திரைப்படத்திலும் இடம்பெறுவார்கள் என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in