1. Home
  2. தமிழ்நாடு

அஜித்தின் “பரஸ்பர மரியாதை” கான்செப்ட்!!

அஜித்தின் “பரஸ்பர மரியாதை” கான்செப்ட்!!

அஜித் மேற்கொள்ள உள்ள உலக சுற்றுப்பயணம் குறித்து அவரது மேலாளர் வெளியிட்டுள்ள தகவல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

பயணம் மீது தீராக் காதல் கொண்டுள்ள நடிகர் அஜித் படத்தின் ஷூட்டிங்களுக்கு இடையே ஊர் சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் பைக்கில் ஊர் சுற்றும் போட்டோக்கள் அவ்வப்போது இணையத்தில் டிரெண்ட் ஆவது வழக்கம்.

துணிவு படம் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மகிழ் திருமேனி படத்தை இயக்குவதாகவும், அனிருத் இசை அமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.


அஜித்தின் “பரஸ்பர மரியாதை” கான்செப்ட்!!


இந்நிலையில் அஜித் ஏகே 62 படத்துக்கு பிறகு அஜித் மோட்டோர் சைக்கிள் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அவரது சுற்றுப் பயணத்துக்கு #Rideformutualres அதாவது, பரஸ்பர மரியாதை பயணம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு , அஜித் குமார் பயணத்தை தொடங்க உள்ளார்.


அஜித்தின் “பரஸ்பர மரியாதை” கான்செப்ட்!!


ஏற்கனவே துணிவு படத்துக்கு முன்பு இது போல் உலக மோட்டார் சுற்றுப் பயணத்தை அஜித் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது ஏகே 62 படத்துக்கு பிறகும் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.


newstm.in

Trending News

Latest News

You May Like