1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் அதிர்ச்சி! விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இளைஞர்!!

மீண்டும் அதிர்ச்சி! விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இளைஞர்!!

விமானத்தில் இளைஞர் ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆர்யா வோஹ்ரா (21) என்ற இளைஞர் பயணித்துள்ளார். இவர், குடிபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பயணி டெல்லியில் விமானம் தரையிறங்கியதும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆர்யா வோஹ்ரா அமெரிக்காவில் உயர் கல்வி படித்து வரும் நிலையில், அவர்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.


மீண்டும் அதிர்ச்சி! விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இளைஞர்!!


இதே போன்ற சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. நியூயார்க்கில் இருந்து டெல்லி விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்த சங்கர் மிஸ்ரா என்பவர் அருகில் இருந்த சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, சங்கர் மிஸ்ரா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் பெங்களூருவில் பதுங்கியிருந்த அவரை போலிஸார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் தற்போதுவரை பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அதேபோல மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like