முதல் ஆட்டத்தில் மோசமான தோல்வியை தழுவிய குஜராத் ஜெயண்ட்ஸ்..!!

முதல் ஆட்டத்தில் மோசமான தோல்வியை தழுவிய குஜராத் ஜெயண்ட்ஸ்..!!
X

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. வருகிற 26-ந் தேதி வரை இப்போட்டி நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன.

தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.இறுதியில், குஜராத் அணி 64 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. ஹேமலதா 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முத்திரை பதித்து 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Next Story
Share it