1. Home
  2. சினிமா

வாவ்... ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாட்டு நாட்டு பாடலை பாட முடிவு..!!

வாவ்... ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாட்டு நாட்டு பாடலை பாட முடிவு..!!

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

ஆர்.ஆர்.ஆர். படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்றது. சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாட்டு நாட்டு பாடலை நேரடியாக பாடவுள்ளனர். தெலுங்கு பாடலை பாடிய ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா இருவரும் இந்த பாடலை பாடவுள்ளதாக ஆஸ்கர் அகடமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 12-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



Trending News

Latest News

You May Like