1. Home
  2. தமிழ்நாடு

தனது பிறந்தநாளிற்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..!!

தனது பிறந்தநாளிற்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..!!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

ட்விட்டரில் கூட #HBDMKStalin70 என்கிற ஹேஷ்டேக், இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்த நிலையில், தனது பிறந்த நாளையொட்டி வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


தனது பிறந்தநாளிற்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..!!

மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்கள் என பலரும் சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்துடன் ட்விட்டரில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டர் டிரண்டிங்கில் #HBDMKStalin70 என்கிற ஹேஷ்டேக் அகில இந்தியா அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

தனது 70ஆவது பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ஆளுநர் ஆர்.என்,ரவி, டெல்லி முதல் மந்திரி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like