1. Home
  2. சினிமா

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது:- எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துக்கிறேன். இவ்வாறு வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.




Trending News

Latest News

You May Like