1. Home
  2. தமிழ்நாடு

உஷார்! உலகம் முழுவதும் பரவும் புதுவகை வைரஸ்!!

உஷார்! உலகம் முழுவதும் பரவும் புதுவகை வைரஸ்!!

உயிருக்கு பாதிப்பு இல்லாத புது வகை வைரஸ் தொற்று அண்மைக்காலமாக பரவி வருவதாக எழுத்தாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக உலகம் பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. இப்போது வைரஸ் பரவல் என்றாலே ஒருவிதமான பீதி மக்களிடையே ஏற்படுகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பின்னர் படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளோம். ஆனால் நம்மை சுற்றி கண்ணுக்கு தெரியாத இன்னொரு நோய்தொற்று பரவிக்கொண்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


உஷார்! உலகம் முழுவதும் பரவும் புதுவகை வைரஸ்!!

கொரோனா அலைக்கு பிறகு அண்மைக்காலமாக மக்கள் சிலர் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பிரபல எழுத்தாளரும், பொருளாதார நிபுணருமான சஞ்சீவ் சன்யால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "மிகவும் கொடிய சளிப்பூச்சி இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவியுள்ளது. எனக்கு தெரிந்து அனைவருக்கும் ஒரு மோசமான தொண்டை தொற்று இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். பதிவுக்கு கீழ் பலரும் தாங்களும் இதே போல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிலர் இதனை குளிர் கால காய்ச்சல் என்றும், குணமாக சில வாரங்கள் ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். எனவே அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.



newstm.in

Trending News

Latest News

You May Like