1. Home
  2. தமிழ்நாடு

வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!

வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!

மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

திரிபுராவில் கடந்த 16ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில் மூன்று மாநிலங்களிலும் யார் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி, திரிபுராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 60 இடங்களில் பாஜக கூட்டணி, 36 முதல் 45 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.


வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!


இடதுசாரிகள் 6 முதல் 11 இடங்களை பெறுவார்கள் என்றும், திப்ரா மோத்தா கட்சி 9 முதல் 19 இடங்களை கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேகாலயாவில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில், 59 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்துவிட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில், தேசிய மக்கள் கட்சி 18 முதல் 24 இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!


காங்கிரஸ் 6 முதல் 12 இடங்களும், பாஜக 4 முதல் 8 இடங்களும், மற்ற கட்சிகள் 17 முதல் 29 இடங்களை பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிகிறது.


வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!


நாகாலாந்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில், தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி 38 முதல் 48 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. நாகா மக்கள் முன்னணி 3 முதல் 8 இடங்களும், காங்கிரஸ் ஒன்று முதல் இரண்டு இடங்களும், மற்ற கட்சிகள் 5 முதல் 15 இடங்களும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like