1. Home
  2. தமிழ்நாடு

ஆவினில் புதிய வகை பால் அறிமுகம்!!

ஆவினில் புதிய வகை பால் அறிமுகம்!!

பால் தட்டுப்பாட்டை சரிசெய்ய மார்ச் 1ஆம் தேதி முதல் கவ் மில்க் (Cow Milk) என்ற பெயரில் புதிய ரக பால் வகையை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

தூத்துக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது பேசு பொருளான நிலையில் அங்கு சென்ற அமைச்சர் நாசர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மக்களுக்கு உரிய நேரத்தில் பால் விநியோகம் செய்ய அவர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பனிக்காலம் என்பதால் இந்தியா முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்படும் எனவும், சாலை விபத்து காரணமாக தூத்துக்குடியில் சில இடங்களுக்கு ஆவின் பால் தாமதமாக சென்றதாக தெரிவித்தார்.


ஆவினில் புதிய வகை பால் அறிமுகம்!!


தமிழ்நாட்டில் தற்போது வரை பால் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று கூறினார். ஆவின் இனிப்பு வகைகள் அதிகம் விற்பனையாவதை கண்டு, தனியார் நிறுவனங்கள் பயப்படுவதாக கூறிய, கோடை காலத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பில் தனி கவனம் செலுத்த உள்ளதாக கூறினார்.

இந்நிலையில், பால் தட்டுப்பாட்டை சரிசெய்ய மார்ச் 1ஆம் தேதி முதல் கவ் மில்க் (Cow Milk) என்ற பெயரில் புதிய ரக பால் வகையை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. பால் தட்டுப்பாடு காரணமாக பச்சை நிற பாக்கெட்டுகளை குறைக்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


ஆவினில் புதிய வகை பால் அறிமுகம்!!

பச்சை நிற பாக்கெட்டுகளில் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து இருக்கும் நிலையில், ஆவின் நிறுவனம் அந்த பாலின் கொழுப்பு அளவை 3.5 சதவிகிதமாக குறைத்து உற்பத்தி செய்யவுள்ளது. ஒரு லிட்டர் பால் 22.50 ரூபாய்க்கு விற்பனைக்கு வர உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like