1. Home
  2. தமிழ்நாடு

இடைத்தேர்தலில் மக்களுக்கு காசு கொடுத்து வாக்கு கேட்பது புற்றுநோய் போன்றது - அண்ணாமலை..!!

இடைத்தேர்தலில் மக்களுக்கு காசு கொடுத்து வாக்கு கேட்பது புற்றுநோய் போன்றது - அண்ணாமலை..!!

கோவை நவக்கரை பகுதியில் பா.ஜ.க. சார்பில் விவசாயிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்களுக்கு காசு கொடுத்து வாக்கு கேட்பது புற்றுநோய் போன்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன. சராசரியாக ஒரு வாக்காளருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை நாட்களுக்கு நாம் இது போன்ற அநாகரீக அரசியலை ஏற்றுக் கொள்ள போகிறோம்.

திருமங்கலம் பார்முலா தமிழக மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. இந்த மாதிரியான அரசியலை தான் முன்னெடுக்க வேண்டுமா? அப்படிதான் வெற்றிபெற வேண்டுமா? தேர்தல் முடிவு எப்படி வரும் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால் இதுபோன்ற அரசியலை மக்கள் ஆதரித்தால், புதியவர்கள் நல்லவர்கள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். இதனால் நாங்களும் குற்ற உணர்ச்சியில் தலைகுனிந்து நின்றிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like