1. Home
  2. தமிழ்நாடு

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல்!!

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல்!!

பெங்களூருவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை- மைசூரு இடையே பெங்களூரு வழியாக வந்தே பாரத் அதிவரைவு ரயில் இயக்கப்படுகிறது. தென் இந்தியாவில் இயக்கப்படும் ஒரே வந்தே பாரத் ரயிலான இது வாரத்தில் 6 நாட்கள் இரு மார்கங்களிலிருந்தும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம்போல் சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மைசூருவுக்கு சென்று கொண்டிருந்தது. காலை சுமார் 10.30 மணியளவில் கிருஷ்ணராஜபுரம்- பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் இடையே சென்ற போது ரயில் மீது மர்மநபர்கள் கற்கள் வீசி தாக்கினர்.


வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல்!!


இதில் 2 ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கண்ணாடிகள் முழுமையாக உடையாததால் ரயில் நிறுத்தப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு நடப்பது இது முதல் முறை அல்ல. இதே போன்று ஏற்கனவே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. தாக்குல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தும் தாக்குதல் தொடர்கிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like