1. Home
  2. தமிழ்நாடு

மனிதர்களை போலவே கால்நடைகளுக்கு விரைவில் ஆதார் கார்டு..?

மனிதர்களை போலவே கால்நடைகளுக்கு விரைவில் ஆதார் கார்டு..?

ஆதார் அட்டை என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரியும். அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் மனிதர்களைப் போலவே கால்நடைகளுக்கும் விரைவில் ஆதார் எண் வழங்கப்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் தெரிவித்துள்ளார்.


மனிதர்களை போலவே கால்நடைகளுக்கு விரைவில் ஆதார் கார்டு..?



இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதற்கான விவரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எந்த ஒரு நோயின் தாக்கம் பற்றி ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால், தடுப்பூசி மற்றும் அதைத் தடுக்கும் வழிகளைக் கண்டுபிடிப்பது இதன்படி எளிதாக இருக்கும் என்றார்.

Trending News

Latest News

You May Like