குவியும் வாழ்த்துக்கள்..!! சாக்கடைக் கழிவுகளை முற்றிலும் இயந்திரங்கள் மூலம் அகற்றும் முதல் மாநிலம்..!!
சாக்கடைக் கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அகற்றுவது சமூக அநீதி என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், அந்த பணியை இயந்திரங்களின் மூலம் செய்ய பல்வேறு மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சாக்கடைக் கழிவுகளை முற்றிலும் ரோபோ இயந்திரங்கள் மூலமாக அகற்றும் முதல் இந்திய மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது.
திருச்சூர் மாவட்டம், குருவாயூரில் கழிவுகளை அகற்ற பண்டிக்கூட் (Bandicoot) என்ற ரோபோ இயந்திரத்தைப் பயன்படுத்தியதன் மூலம் இந்த பெருமையை கேரளா பெற்றுள்ளது.
கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அகற்றும் நடைமுறை தங்கள் மாநிலத்தில் முற்றிலும் முடிவுக்கு வந்திருப்பதாக கேரள அரசு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
கழிவகற்றும் இயந்திர பயன்பாடு தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் சில நகரங்களில் அமலில் இருந்து வருகின்றன.