1. Home
  2. தமிழ்நாடு

ஈரோட்டில் ஒட்டியுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது..!!

ஈரோட்டில் ஒட்டியுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது..!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில், ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுத்து, தண்டனை பெற்றுத்தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வரும் நிலையில்,ஈரோட்டில் இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Trending News

Latest News

You May Like