சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..!! இனி தேஜஸ் ரெயில் தாம்பரத்தில் நின்று செல்லும்..!!
அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு ரயிலான தேஜஸ் ரயிலின் சேவை சென்னை - மதுரை இடையே 2019-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு நண்பகல் 12.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9.30 மணிக்கு சென்னை வந்தடைகிறது. திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்லும்.இந்த அதிவிரைவு ரெயிலை மேலும் சில நிறுத்தங்களில் நிறுத்தி சென்றால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தேஜஸ் ரெயில், தாம்பரம் ரெயில் நிலையத்தில் பிப்ரவரி 26 முதல் நின்று செல்லும் என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.