1. Home
  2. தமிழ்நாடு

நரபலி விவகாரம் – காவல்துறை உத்தரவாதம்!!

நரபலி விவகாரம் – காவல்துறை உத்தரவாதம்!!

நரபலி அச்சம் தொடர்பாக தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரியான ஷாலினி சர்மா என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டிருந்தார். தனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா தன்னை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறி பகீர் கிளப்பியிருந்தார்.

ஏற்கனவே தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக புகாரளிக்க யாருக்கும் தைரியமில்லை என்றும் கூறியுள்ளார்.


நரபலி விவகாரம் – காவல்துறை உத்தரவாதம்!!

நண்பரின் உதவியுடன் சென்னை வந்ததாகவும், தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் தன்னை, தனது குடும்பத்தினரும், ஏ.பி.வி.பி. அமைப்பினரும் போபால் அழைத்துச் சென்று விடுவர் என அச்சம் தெரிவித்திருந்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், ஆன்லைனில் பெறப்பட்ட புகாரும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

பெண்ணுக்கும், அவருக்கு உதவிய இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு குறித்து ஷாலினி சர்மாவின் பெற்றோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like