1. Home
  2. தமிழ்நாடு

திமுக எம்பி ஆ. ராசாவின் சகோதரரால் ஒரு குடும்பமே தீக்குளிக்க முயற்சி..!!

திமுக எம்பி ஆ. ராசாவின் சகோதரரால் ஒரு குடும்பமே தீக்குளிக்க முயற்சி..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியர் அலுவலகத்தில் எதிரே நின்று தங்கள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசாரும் செய்தியாளர்களும் ஓடி வந்து அவர்களை மீட்டு உள்ளனர்.

அப்போது போலீசார் அவர்களிடம் ஏன் தீக்குளிக்க முயற்சித்து இருக்கிறேன் என்று கேட்டதற்கு, தாங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், திமுக எம்பி ஆ.ராசாவின் சகோதரர் தங்களின் நிலத்தை பறித்துக் கொண்டு விட்டார். அதனால் வழக்கறிஞர்களை நாடி கோர்ட்டில் வழக்கு தொடரப்போனால் அவர்களையும் வளைத்து போட்டுக் கொள்கிறார் ஆ.ராசாவின் சகோதரர். இதனால் எங்களுக்கு நியாயம் கிடைக்காமல் இருக்கிறது என்று கூறி கண்ணீர் வடித்துள்ளனர்.

இது குறித்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, திமுக என்றாலே ஊழல் -ரவுடிசம் தான் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.



Trending News

Latest News

You May Like