1. Home
  2. தமிழ்நாடு

ரயில் பயணிகளுக்கு ஷாக்: இனி ரயிலில் உணவு வாங்க அதிக செலவாகும்..!!

ரயில் பயணிகளுக்கு ஷாக்: இனி ரயிலில் உணவு வாங்க அதிக செலவாகும்..!!

நாட்டில் பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வகையான வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய ரயில்வேயின் PSU, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக உணவு சேவையையும் வழங்குகிறது.

இந்நிலையில் ஐஆர்சிடிசி ரயில்வே உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ரொட்டி முதல் பர்கர் வரை அனைத்திலும் பொருந்தும்.


ரயில் பயணிகளுக்கு ஷாக்: இனி ரயிலில் உணவு வாங்க அதிக செலவாகும்..!!

இது குறித்து ஐஆர்சிடிசி கூறியுள்ளதாவது, உணவு மெனுவில் பல பொருட்கள் சேர்க்கப்பட்டு அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விலைவாசி அதிகரிப்பின் காரணமாக ரயிலில் ரொட்டி, தோசை, தால், குலாப் ஜாமுன் மற்றும் சாண்ட்விச் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. அதே சமயம் பேன்ட்ரி காரில் கிடைக்கும் சாதாரண உணவுகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் ஐஆர்சிடிசி தெளிவுப்படுத்தியுள்ளது.

ரொட்டி - ரூ.3ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சாண்ட்விச் - ரூ 15 முதல் ரூ 25 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மசாலா தோசை - ரூ.40ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பிரட் பக்கோடா - ரூ.10ல் இருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆலு போண்டா- 7 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சமோசா - 8 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பர்கர் - ரூ.40ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


Trending News

Latest News

You May Like