அந்தரங்க உறுப்புகளை தொட்டதாக பிரபல கிரிக்கெட் வீரர் மீது புகார்!!
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பிரித்வி ஷா தனது அந்தரங்க உறுப்புகளை தொட்டதாக நடிகை சப்னா கில் பகீர் கிளப்பியுள்ளார்.
கடந்த 15ஆம் தேதி இரவு மும்பையில் ஹோட்டலுக்கு வெளியே சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் ப்ரித்வி ஷாவுடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்தனர். அப்போது பிரித்வி ஷா மறுத்ததால், அவரது காரை சப்னா கில்லும், அவரது நண்பரும் தாக்கினர்.
இது குறித்து பிருத்வி ஷாவின் நண்பர் ஆஷிஷ் சுரேந்திர யாதவ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து சப்னா கில் உட்பட 8 பேர் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
சப்னா கில் உட்பட 3 பேரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி சப்னா கில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவை விசாரித்த அந்தேரி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. வெளியே வந்த சப்னா கில் பிருத்வி ஷா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பிரித்வி ஷா குடிபோதையில் இருந்ததாகவும், தன்னை மானபங்கப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்த பிரித்வி ஷாவும், அவரது நண்பர்களும் தனது நண்பரை துன்புறுத்தினர் என்றும், தடுக்க சென்ற தன்னையும் தகாத வார்த்தைகளால் பேசினார்கள் எனவும் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தனது அந்தரங்க உறுப்புகளை தொட்டு தாக்கினார் என்று குற்றம் சாட்டியுள்ளார். நாங்கள் யாரையும் அடிக்கவில்லை, பணம் கேட்கவில்லை. எங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் என்று சப்னா கில் கூறியுள்ளார்.
newstm.in