தாயின் நரபலி அச்சம்! நீதிமன்றத்தில் மனு!!
வளர்ப்பு தாயால் நரபலி அச்சம் இருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய பிரதேச மாணவி ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
முதுகலை பட்டதாரி மாணவி ஷாலினி சர்மா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ABVP அமைப்பைச் சேர்ந்த தனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்திரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார் என்றும், ஏற்கனவே தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலிஸில் புகாரளிக்க எவருக்கும் தைரியமில்லை என்று கூறியுள்ளார்.
ளர்ப்புத் தாயின் நரபலியில் இருந்து தப்பித்து, தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17ம் தேதி சென்னை வந்தேன். தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் தன்னை, குடும்பத்தினரும், ABVP அமைப்பினரும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விட வாய்யு உள்ளதாக அறிவித்துள்ளார்.
newstm.in