1. Home
  2. தமிழ்நாடு

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? – எல்டிடிஇ பதில்!!

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? – எல்டிடிஇ பதில்!!

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்த நிலையில், அதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகன் அளித்துள்ள பேட்டியில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது சில நாடுகள் அண்மையில் தடைவிதித்தன. அந்த தடையை நீட்டிப்பதற்கான முன்முயற்சிதான் இந்த பேச்சு என அவர் கூறியுள்ளார்.

இப்போது பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் பேசுவது, பொதுமக்களை குழப்பும், எதிரிகளை தூண்டிவிடும் செயல் என தயா மோகன் குற்றம் சாட்டியுள்ளார். இப்போது தான் மக்கள் மீண்டு வாழ்ந்து வருகின்றனர்.


பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? – எல்டிடிஇ பதில்!!

இதுபோன்ற பேச்சுகள் மூலம் மீண்டும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர், அதுபோன்ற மோசமான சூழலைதான் பழ.நெடுமாறனின் பேச்சு ஏற்படுத்தும் என்று தயா மோகன் கவலை தெரிவித்துள்ளார்.

எனவே, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பது மக்களை குழப்புவதற்கான அறிவிப்பு என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like