தந்தையின் உயிரை காப்பாற்ற ஒரு மகளின் பாச போராட்டம்..!!
கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவானந்தா. 17 வயது பள்ளி மாணவியான இவர், தனது தந்தை பிரதீஷுக்கு உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி வழங்குமாறு கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். தனது தந்தையின் உயிரை காப்பாற்ற கல்லீரலை தானம் செய்த முன்வந்தபோது வயதை காரணம் காட்டி மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக மாணவி தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கல்லீரல் தானம் வழங்க மாணவிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டதோடு, மாணவியை வெகுவாக பாராட்டினார். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பிரதீஷுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதையடுத்து, தந்தையும், மகளும் பூரணம் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமியின் தந்தை தற்போது கல்லீரல் மாற்றப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் கல்லீரல் தானம் செய்து உதவிய தனது மகளை அவர் நெஞ்சாரப் பாராட்டி இருக்கிறார்.
இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம் இந்தியாவிலேயே சிறு வயதில் தானம் செய்தவர் எந்த பெருமையை மாணவி தேவானந்தா பெற்றிருக்கிறார். இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உடல் தானம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.