1. Home
  2. சினிமா

வாரிசு படம் இந்த தேதியில் ஒடிடியில் வெளியாகிறது - அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

வாரிசு படம் இந்த தேதியில் ஒடிடியில் வெளியாகிறது - அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தளபதி விஜய் நடிப்பில் ‘வாரிசு’ திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், சரத்குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கடந்த மாதம் 11அம் தேதி வெளியான இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி படைபள்ளி இயக்கியிருந்தார். குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். தில்ராஜு படத்தை தயாரித்திருந்தார்.


வாரிசு படம் இந்த தேதியில் ஒடிடியில் வெளியாகிறது - அதிகாரபூர்வ அறிவிப்பு..!!


உலக அளவில் சூபர்ஹிட்டான இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதிலும் குறிப்பாக ‘ரஞ்சிதமே…….ரஞ்சிதமே….’ நடிகர் விஜய், பாடகி மான்சி இணைந்து பாடிய இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். பாடல் வெளியான சமயத்தில் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்த இந்த பாடலை சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பெரிதும் ரசித்தனர்.

இந்நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிரும் படம் வரும் பிப்ரவரி 22 முதல் ப்ரைம் வீடியோவில் திரையிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.



வாரிசு படம் இந்த தேதியில் ஒடிடியில் வெளியாகிறது - அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

Trending News

Latest News

You May Like