1. Home
  2. தமிழ்நாடு

கணவனை தோளில் சுமந்து வந்து நீதி கேட்ட மனைவி!!

கணவனை தோளில் சுமந்து வந்து நீதி கேட்ட மனைவி!!

அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்த கணவனை, மனைவி தனது தோளில் தூக்கிக் கொண்டு வந்து காவல்துறையினரிடம் நீதி கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலம் சோஹாக்பூர் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான ஜெனட்லால் யாதவை, அடையாளம் தெரியாத இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அவர் வேலை முடிந்து வீடு திரும்பும் போது தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்கிவிட்டு அவரிடம் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. காயமடைந்த ஜெனட்லாலை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


கணவனை தோளில் சுமந்து வந்து நீதி கேட்ட மனைவி!!

இதுகுறித்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பின்னர் காவல்துறையினர் புகார் தெரிவித்தார். தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி போலீஸார் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விபின் யாதவ், கம்லி யாதவ், தினேஷ் யாதவ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் அதன்பிறகு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ஜெனட்லால் யாதவை தனது முதுகில் தூக்கிக் கொண்டு அவரது மனைவி ராணி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் வைஷ்யாவை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த பெண் தனது கணவரை முதுகில் சுமந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


newstm.in

Trending News

Latest News

You May Like